லியோவில் இடம்பெற்ற சண்டைக்காட்சியில் நடிகர் ஜெகபதி பாபு!!! ரசிகர்கள் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!!!

Photo of author

By Sakthi

லியோவில் இடம்பெற்ற சண்டைக்காட்சியில் நடிகர் ஜெகபதி பாபு!!! ரசிகர்கள் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!!!

Sakthi

லியோவில் இடம்பெற்ற சண்டைக்காட்சியில் நடிகர் ஜெகபதி பாபு!!! ரசிகர்கள் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!!!

லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற காபி ஷாப் சண்டைக் காட்சி போலவே நடிகர் ஜெகபதி பாபு அவர்கள் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற காபி ஷாப் சண்டைக் காட்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான லியோ திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனைகளை படைத்து வருகின்றது.

இந்த லியோ திரைப்படத்தில் கழுதைப் புலியுடன் ஒரு சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் காபி ஷாப்பில் ஒரு சண்டைக் காட்சியும், மார்கெட்டில் ஒரு சண்டைக் காட்சியும், சஞ்சய் தத் அவர்களுடன் ஒரு சண்டைக் காட்சியும், பிளாஷ்பேக் காட்சியில் ஒரு சண்டைக் காட்சியும், கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சண்டைக் காட்சியும் உள்ளது.

இதில் காபி ஷாப் சண்டைக் காட்சியில் நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் மிஷ்கின் மற்றும் சான்டி மாஸ்டர் இருவருடன் சண்டையிடுவது போல இந்த சண்டைக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதே போல நடிகர் ஜாக்கி பாபு அவர்கள் நடித்த திரைப்படத்தில் அமைந்துள்ள காபி ஷாப் சண்டைக் காட்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ஜெகபதி பாபு அவர்களின் நடிப்பில் 2010ம் ஆண்டில் காயம் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திலும் எ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் திரைப்படத்தில் வருவது போலவே காபி ஷாப் சண்டைக் காட்சி உள்ளது. அந்த சண்டைக் காட்சி வீடியோவை ரசிகர்கள் தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.