இந்த படங்கள் எல்லாம் நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது!!? அப்போது மிஸ் பண்ணிட்டு இப்ப அழுது என்ன செய்ய முடியும்!!!

0
208
#image_title

இந்த படங்கள் எல்லாம் நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது!!? அப்போது மிஸ் பண்ணிட்டு இப்ப அழுது என்ன செய்ய முடியும்!!!

தமிழ் திரையுலகில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஜெய் அவர்களும் ஒருவர். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைவார் என்று பார்த்தால் மீம்ஸ்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி பிரபலமாகி இருக்கிறார்.

பல அருமையான திரைப்படங்கள் நடிகர். ஜெய் அவர்களை தேடி வந்தது. அதில் எதாவது ஒன்றை தேர்வு செய்து நடித்திருந்தால் நடிகர் ஜெய் ஜாக்பாட் ஜெய்யாக மாறி இருப்பார். மேலும் கெரியரிலும் செட்டில் ஆகி இருப்பார்.

என்னதான் வில்லன், கதாநாயகன், காமெடி கதாப்பாத்திரம், சீரியஸ் கதாப்பாத்திரம் என்று நடித்தாலும் நடிகர் ஜெய் அவர்களால் சினிமாவில் இன்னும் முன்னேற முடியாமல் இருக்கிறார். அவர் தவறவிட்ட அருமையான படங்களை பற்றி பார்க்கலாம்.

1. சிவா மனசுல சக்தி

நடிகர் ஜீவா, சந்தானம், அனுயா, ஊர்வசி நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஸ் இயக்கத்தில் 2009ம் ஆண்டு சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் நடிகர் ஜீவா வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. ரொமேன்டிக் காமெடி திரைப்படமான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் நடிகர் ஜெய் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிகர் ஜெய் அவர்கள் அப்பொழுது சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் பிசியாக இருந்ததால் இந்த திரைப்படத்தின் வாய்ப்பை மறுத்துவிட்டார். ஆனால் சிவா மனசுல சக்தி திரைப்படம் நடிகர் ஜீவா அவர்களுக்கு மெகா ஹிட் திரைப்படமாக மாறியது.

2. விண்ணைத் தாண்டி வருவாயா

தற்பொழுதும் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடிகர்கள் சிலம்பரசன், திரிஷா, ஆண்டனி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. நடிகர் சிலம்பரசன் அவர்களுடைய சினிமா வாழ்க்கையில் பல வெற்றி திரைப்படங்கள் இருந்தாலும் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் முக்கியமான திரைப்படமாக உள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் முதலில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடிகர் ஜெய் அவர்களிடம் கதை கூறியுள்ளார். ஆனால் நடிகர் ஜெய் சில காரணங்களை முன்வைத்து அந்த வாய்ப்பை நடிகர் சிலம்பரசனுக்கு பாஸ் செய்தார்.

3. நாடோடிகள்

நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ல் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை கொடுத்தது. இதையடுத்து நாடோடிகள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் நடிகர் ஜெய் அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு நடிகர் ஜெய் “ஏற்கனவே நடிகர் சசிகுமார் உடன் இணைந்து நடித்துவிட்டேன். மீண்டும் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்க விரும்பவில்லை” மறுப்பு தெரிவித்தார். இவருடைய இந்த மறுப்பு தமிழ் சினிமாவில் முன்னேற்றம் அடைய வேண்டிய இவருடைய வாழ்க்கைக்கு தடையாக அமைந்தது.

4. ராட்சசன்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் 2018ல் ராட்சசன் திரைப்படம் வெளியானது. ராட்சசன் திரைப்படம் நடிகர் விஷ்ணு விஷால் அவர்களின் வாழ்க்கையில் கம்பேக் திரைப்படமாக அமைந்தது. ராட்சசன் திரைப்படத்தில் நடிக்க முதலில் நடிகர் ஜெய் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நடிகர் ஜெய் அவர்கள் திரைப்படத்தின் கதை பிடிக்கவில்லை என்று கூறி வாய்ப்பை மிஸ் செய்தார்.

5. போடா போடி

2012ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் போடா போடி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிலம்பரசன் இருவருக்கும் பெஸ்ட் படமாக மாறியது. ஆனால் இந்த திரைப்படத்தையும் நடிகர் ஜெய் அவர்கள் தவறிவிட்டது அவருடைய சினிமா வாழ்வையே தவறவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ஐந்து திரைப்படங்களில் எதாவது ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் நடிகர் ஜெய் அவர்கள் முன்னணி நடிகராக மாறி இருப்பார். ஆனால் சொல்லி வைத்தது போல முக்கியமான திரைப்படங்களை நடிகர் ஜெய் அவர்கள் மிஸ் செய்துவிட்டார். இதனால் இவருடைய சினிமா வாழ்கையும் மிஸ் ஆனது.

Previous articleமகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!
Next article5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!