மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

0
129
#image_title

மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.அதே போல் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இது குறித்து மூச்சி விடாத திமுக அரசை பல்வேறு கட்சிகள் விமர்சித்து வந்தது.பல்வேறு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்தது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆலோசனை நடத்தப்பட்டு ஜூலை மாதம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இரு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு குடும்ப தலைவிகளிடம் இருந்து பூரித்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரேஷன் ஊழியர்கள் பெற்று அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.இந்த பணி முடிந்த நிலையில் மொத்தம் 1.70 லட்சம் பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தனர் என்றும் அதில் சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து சோதனை முயற்சியாக திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் செலுத்தப்பட்டது.பல பெண்கள் தங்களது வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் வர வில்லை என்று புலம்பினர்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15 அன்று இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் தொடங்கிய நாளிலிருந்தே பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் 1 ரூபாய் வரவில்லை என்றாலும் தகுதி பெற்ற பெண்களுக்கு ரூ.1000 கிடைக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.மாதந்தோரும் ரூ.1000 கிடைக்கும் உரிமை தொகை திட்டத்தில் நீங்கள் இணைந்து விட்டீர்களா? இல்லையா? என்ற அதிகாரபூர்வ குறுஞ்செய்தி அந்தந்த மகளிரின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் குறுஞ்செய்தி வந்த அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் இந்த திட்டத்தில் இணைந்து விட்டீர்கள் என்று குறுஞ்செய்தி வந்த பெண்களில் பலருக்கு அவர்களது வங்கி கணக்கில் திமுக அரசு ரூ.1000 செலுத்த வில்லை.அதேபோல் சோதனை முயற்சியாக ரூ.1 வங்கி கணக்கில் போடப்பட்ட பெண்களில் சிலருக்கு இந்த 1000 ரூபாய் பணம் செலுத்தப்பட வில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

அதேபோல் வசதி படைத்த விண்ணப்பதாரர்கள் தான் இந்த திட்டத்தில் அதிகம் பயன் பெற்றுள்ளனர் என்று ரூ.1000 பெற தகுதி இருந்தம் இந்த திட்டத்தில் நிராகரிக்கபட்ட பெண்கள் வேதனையையும்,தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த திட்டத்தின் பலன் ஏழை பெண்களுக்கு சென்று சேரவில்லை என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

இந்நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்ததை தொடர்ந்து 1000 கணக்கான பெண்கள் இ-சேவை மையத்தை அணுக தொடங்கி இருக்கின்றனர்.இந்த திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு இ-சேவை மையத்தில் மீண்டும் விண்ணப்பிப்பது தான் என்று சொல்லப்படும் நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக உரிமைத்தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்யும் இணையதளம் முடங்கி இருக்கிறது.

இதனால் கூடி இருக்கும் பெண்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இ-சேவை ஊழியர்கள் முழித்து வருகின்றனர்.மேல்முறையீடு செய்ய பெண்கள் பலர் கால் கடுக்க காத்திருக்கும் நிலையில் இணையதள சேவை முடங்கி இருப்பது கூட தெரியாமல் திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஒரு சிலர் பெண்கள் விண்ணப்பிக்க கூடாது என்பதற்காக திமுக அரசு செய்துள்ள சதி செயல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.