ஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! 

0
129
#image_title
ஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!!
நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் யாத்ரா என்ற பெயரில் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி அவர்களின் கதாப்பாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி அவர்கள் நடித்திருந்தார்.
யாத்ரா திரைப்படத்தை இயக்குநர் மஹி.வி.ராகவ் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் சுஹாசினி மணிரத்னம், ஜகபதி பாபு, தலைவாசல் விஜய், ராவ் ரமேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக யாத்ரா 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் ஜீவா அவர்கள் இந்த திரைப்படத்தில் தற்போதைய ஆந்திர மாநில முதல்வர். ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள யாத்ரா2 திரைப்படம் 2024ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் யாத்ரா 2 திரைப்படத்தின் முதல்பார்வை அதாவது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த ஃபரஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.
Previous article5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!
Next articleபாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!!