5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

0
55
#image_title

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது.

இந்த நிலையில் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. இதையடுத்து ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்கள் டெல்லியில் இன்று(அக்டோபர்9) அறிவித்துள்ளார்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதியும் 17ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின். முன்னோட்டமாக 5 மாநிலங்களில் தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நாட்டு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.