பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!!

0
128
#image_title

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!!

பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக வெளியாகி செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் விஜய் அவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். குழந்தைகளுக்கு தளபதி பயிலகம் என்று இலவச கல்வி என்று பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அவ்வப்போது நடிகர் விஜய் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரைவில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் என்ட்ரி குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவுள்ளது.

அதற்கான வேலைகளையும் நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்களின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மத்தியில் ஆளும் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் பரவி வந்தது. இதை மறுத்து தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் புதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் இது குறித்து “இன்றைய அக்டோபர் 9 தினமலர் நாளிதழில் தளபதி நடிகர் விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.

தளபதி அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு தளபதி அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

Previous articleஜெகன் மோகன் ரெட்டியாக  நடிக்கும் நடிகர் ஜீவா!!! இணையத்தில் வரைலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! 
Next articleசிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!