பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகப்போகும் கமல்ஹாசன் ? காரணம் என்ன ?

0
132

‘விக்ரம்’ படத்திற்கு முன்னர் வரை சில வருடங்களாக கமல்ஹாசன் நடிப்பில் எவ்வித படமும் வரவில்லை, இருப்பினும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் நடிகர் இடைவினையாற்றிக்கொண்டு இருந்தார். அதன் பிறகு ‘நாயகன் மீண்டும் வரான்’ எனும் வசனத்திற்கேற்ப விக்ரம் படம் மூலமாக கமல்ஹாசன் மாஸான கம்பேக் கொடுத்திருந்தார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்துள்ளது, இப்போது அவரது கைவசம் இந்தியன்-2, கேஹெச் 234, விக்ரம் போன்ற பல திட்டங்கள் வரிசையாக உள்ளது.Kamal Haasan says he will 'repay all loans' as Vikram earns ₹300 cr  worldwide - Hindustan Times

அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார், இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிக்கொள்ள கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது ஆறாவது சீசன் நடந்து வருகின்றது, இந்நிகழ்ச்சி 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு நிறைவடைந்து விடக்கூடும். இந்நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வை தொகுத்து வழங்கிய கையோடு முழுவதுமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறப்போகிறார் என்று கூறப்படுகிறது.Bigg Boss Tamil: Release your anger at the right time, Kamal Haasan's  message to the fans - IBTimes India

பிக்பாஸின் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் மக்களிடத்தில் பெரிதாக சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை என கமல் கருதுவதாக கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் குழு கமலுக்கு 7வது சீசனை தொகுத்து வழங்க மிகப்பெரிய தொகையை வழங்குவதாகவும் கூறியுள்ளதாம், இருப்பினும் கமல் அதையெல்லாம் விடுத்தது தனது அடுத்தடுத்த படங்களின் பணிகளில் கவனத்தை செலுத்தப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Savitha