எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

0
82

எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து தனி முத்திரை பதித்த நயன்தாரா தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதன்மையானவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

இவர் அண்மையில் நடித்து வெளியான கோல்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களினை பெற்று இருந்தது. திருமணத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் இன்று இந்த படம் வெளியாகி உள்ளது. விக்கி மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்க அஸ்வின் சரவணன் இயக்க அனுபம் கேர், வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் கனெக்ட் படத்தின் ப்ரோமோசனுக்காக தொகுப்பாளினி டிடிக்கு நயன்தாரா பெட்டி ஒன்றினை அளித்தார். அந்த பேட்டியில் பல விசயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் நயன்.

கனெக்ட் படத்தில் தனக்கு தந்தையாக நடித்த சத்யராஜ் குறித்து பேசிய நயன் “ எனக்கு சத்யராஜை பார்க்கும் பொது எல்லாம் அவர் எனக்கு அப்பா தான்” என நினைக்க தோன்றுவதாக நெகிழ்ச்சியுடன் மனம் திறந்துள்ளார். ராஜா-ராணி படத்திலும் இவர்கள் இருவரும் தந்தை, மகளாக நடித்துள்ள நிலையில் நயனின் இந்த பேட்டி மிகவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.