நடிகர் கார்த்திக் திடீர் மயக்கம் ! பதற்றத்தில் மருத்துவர்கள் !

Photo of author

By CineDesk

நடிகர் கார்த்திக் திடீர் மயக்கம் ! பதற்றத்தில் மருத்துவர்கள் !

CineDesk

Updated on:

Actor Karthik suddenly faints! Doctors in tension!

நடிகர் கார்த்திக் திடீர் மயக்கம் ! பதற்றத்தில் மருத்துவர்கள் !

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்திக் நான் எம்பியாக  ராஜ்யசபா  போனால் என் குரல் ஒலிக்கும் என்றும், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க ராஜ்யசபா போக வேண்டும் அதுதான் நடைமுறை என்றும் கூறினார்.என்னுடையது சின்ன கட்சி இல்லை,நான் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்  கூட வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

மேலும் என் கட்சிக்கு ஒரு தனித்துவம் உள்ளது  ‘நான் ஒன் மேன் ஆர்மி’ ஆனால் என்னிடம் உறுப்பினர்கள் இல்லாமல் இல்லை தேர்தல் நடக்கும் பொழுது பாருங்கள் என் தொண்டர்களின் கூட்டத்தை என்று சவால் விட்டார். ஜாதி அரசியல் கிடையாது என்றார். ‘நான் என் ரசிகர்களை எனக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவில்லை நல்லாட்சிக்கு ஓட்டுப்போடுங்கனு தன் சொல்லுறன்’ என்று கூறினார். மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் நாங்கள் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றவுடன் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுமென்று பேசுவேன் எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று காலை  நடிகர் கார்த்திக்கை  மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரச்சாரத்தில் மக்களை சந்தித்த போது கொரோனா தொற்று வந்திருக்க கூட வாய்ப்பு உள்ளது என்றும் பேசி வருகின்றனர்.