காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்!

0
60
Step by step in Congress! Election candidates in shock!
Step by step in Congress! Election candidates in shock!

காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்!

வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் பலவித முறைகளில் தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.கூட்டணி கட்சிளை ஆதரித்தும் அவர்கள் வாக்குகளை சேகரிக்கின்றனர்.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இந்த கூட்டணி கட்சிகளிலிருக்கும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் புதிய யுக்திகளை பயன்படுத்தி ஓட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் பல வதந்திகளையும் பரப்பி தேர்தல் களத்தை சிறிதளவு பதற்றமடைய செய்கின்றார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் போட்டியிடுகிறார்.இவருடைய மகள் திவ்யா டம்மி வேட்பாளராக இதே தொகுதியில் வேட்புமனு செய்துள்ளார்.தேர்தல் களத்தில் மிக தீவிரமாக தனது தந்தைக்காக வாக்குகளை சேகரித்து வருகிறார்.இவரது தந்தை மாதவராவ் விற்கு 69 வயதாகிறது.இந்நிலையில் தேர்தல் அலைச்சல் காரணமாக சோர்வுற்று இருப்பதால் இவரால் சரியாக பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை.,

இவரது மகள் தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபடுவதால் மாதவராவ் விற்கு பதிலாக திவ்யா தேர்தல் வேட்பாளராக மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவந்தது.அதற்கு பதிலளிக்கும் விதமாக மாதவராவ் கூறியது,இந்த தொகுதியில் யார் வெற்றி வாகையா சூடப் போகிறார்கள் என தற்போதே உறுதியாகிவிட்டது.அதற்கு பயந்து இந்த எதிர் கட்சியினர் மக்களை குழப்புவதற்காக இவ்வாறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.இந்த தேர்தல் களம் மிகவும் தெளிவாக உள்ளது.திவ்யா வெறும் டம்மி வேட்பாளர் தான் மற்றும் அவர் தனது மனுவை மீண்டும் வாபஸ் பெற்றுக்கொண்டார் என உருக்குமாக கூறினார்.