வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

Photo of author

By Parthipan K

வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

Parthipan K

கொரோனா போது முடக்கத்தான் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது பொழுது போக்கை புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, ஓவியம் வரைவது என இன்னும் பல முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் பிக்பாஸ் பிரபலமான மதுமிதா, தமிழ்  சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு  “தேனடை என்ற பட்டப்பெயரும் உண்டு .

ஊரடங்கு காலத்தில், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் இதுவரை தனக்கு தெரியாத ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் காரோட்ட பயிற்சி எடுத்து வருகிறார் மதுமிதா.

 

“பெண்கள் எப்பொழுதும் மற்றொருவரை சார்ந்து இருக்க கூடாது.அது மிகவும் தப்பான விஷயம். கார் ஓட்டக் கற்றுக் கொண்டால் ஓட்டுனர் இல்லாமல் எங்கு போனாலும்  தனியாகவே சென்று வரலாம். இந்த காலகட்டத்தில் யாரையுமே நம்ப முடியாத சூழ்நிலையில் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வது பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மதுமிதா பதிவிட்டுள்ளார்