அதி நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம்:! வரைபடம் வெளியானது

0
62

சென்னை, வண்டலூர் அருகே ரூ.309 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதற்கான முழு வரைப்படம்  தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. வார இறுதியில் நீண்ட தூரத்திற்கு வரிசையில் நிற்கும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள்.

இந்நிலையில்தான், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் புது புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2013-ல் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த பேருந்து நிலையம் சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.309 கோடி செலவில் அமைக்கப்பட இருக்ககிறது. இப்பேருந்து நிலையத்தில் 7.4 ஏக்கரில் 13 பிளாட்பார்ம்களுடன் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. 13 பிளாட்பார்ம்கள் இருப்பதால், 82 மாநகர பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்து செல்லும் வசதி உள்ளது.

அது மட்டுமல்லாமல் 1100 கார்கள், 2798 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி அங்கு உள்ளன. மேலும்,  தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 2,700 அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளும்  இங்கிருந்து இயக்கப்பட உள்ளன. தினமும், சுமார் 75 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்ல முடியும். அத்தோடு, பயணிகள் தங்களின் உடமைகளை எளிதாக எடுத்துச் செல்வதற்கு நகரும் படிக்கட்டுகளும் இங்கு உள்ளன.

மேலும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ளன.

மற்றும் ஆட்டோ, கால் டாக்சி போன்ற வாகனங்களை  நிறுத்த தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான வரைப்படம் வெளியாகியுள்ளது. வரைப்படத்தை பார்க்கும் பொழுது கோயம்பேடு பேருந்து  நிலையத்தைவிட இது நவீனமாக உள்ளது என தெளிவாகிறது.

author avatar
Parthipan K