உதயநிதியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மயில்சாமி வைரலாகும் புகைப்படம்.!!

Photo of author

By Vijay

நடிகர் மயில்சாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்ட்டிக்கிள் 15 திரைப் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.இந்த படத்தை கனா திரைப்படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப்படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த நிலையில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கொரனோ பாதிப்பால் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகர் மயில்சாமியின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலின் அன்று படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கியுள்ளார்.