கமல்ஹாசனை கண்டு பயம் எல்லாம் இல்லை! நடிகர் மைக் மோகன் பேட்டி!

0
263
Actor Mike Mohan interviewed that there is no fear of seeing Kamal Haasan
#image_title

நடிகர் கமல்ஹாசன் அவர்களை கண்டு எனக்கு பயம் எல்லாம் இல்லை என்று பிரபல நடிகர் மைக் மோகன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மௌனராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, 24 மணி நேரம், நூறாவது நாள் போன்ற பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் மைக் மோகன் அவர்கள் நடித்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வந்த நடிகர் மைக் மோகன் அவர்கள் 2008ம் ஆண்டு சுட்டபழம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பின்னர் 16 வருடங்களுக்கு பிறகு ஹரா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர் நடிகர் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் குறித்து பயம் இல்லை என்று கூறியுள்ளார்.

நடிகை சுஹாசினி அவர்கள் தனியார் யூடியூப் சேனலுக்காக எடுத்த பேட்டியில் நடிகர் மைக் மோகன் அவர்கள் பேசினார். அந்த பேட்டியில் நடிகை சுஹாசினி அவர்கள் மைக் மோகன் அவர்களிடம் “கமல்ஹாசன் அவய்கள் வந்தால் மட்டும் அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று விடுகிறீர்கள். ஏன் கமல்ஹாசன் அவய்கள் மீது பயமா?” என்று கேள்வி கேட்டார்.

அதற்கு நடிகர் மைக் மோகன் அவர்கள் “கமல்ஹாசன் அவர்கள் மீது எனக்கு என்ன பயம் இருக்கின்றது. பயம் எல்லாம் ஒன்றும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மீது எனக்கு மரியாதை தான் இருக்கின்றது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மிகப் பெரிய நடிகர்.

நான் உங்களுடன் சாதாரணமாக இப்படி அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அரட்டை அடிக்கின்றேன். ஆனால் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடனும் சரி அவர் இருக்கும் போதும் சரி என்னால் அப்படி பேசி சாதாரணமாக இருக்க முடியாது. அதனால் தான் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வந்தால் அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறேன். அவர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.

author avatar
Gayathri