பகலில் பிச்சைக்காரர்கள் இரவில் திருடர்கள்! நடிகர் பார்த்திபன் தெரிவித்த பகீர் தகவல்
சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.நேற்று மாலை இதை நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொது மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டார்.
மேலும் காவல் துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இது மட்டுமில்லாமல் சிக்னலில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை பின்னிருந்து இயக்குவது யாரென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தது குறித்து கூறுகையில் பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சாம்பாரில் இருக்கும் வெங்காயம் போன்று இருக்கும். சாம்பாரில் இருக்கும் வெங்காயம் சுவையானது அந்த அளவுக்கு என்னுடைய கேரக்டரும் அந்த படத்தில் இருக்கும் என்று அவர் கூறினார்.
அடுத்தபடியாக திருடர்களை படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். பயப்படாதீங்க.அவர்கள் இதயத்ததை திருடுபவனாக இருக்கும் என தனக்கே உரிய பாணியில் அவர் அப்போது நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேலும் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார் என்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார். இதே போல் சென்னையில் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிச்சைக்காரர்கள் வேடத்தில் திருடர்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பகலில் கை மற்றும் கால்களில் போலியான கட்டு கட்டி கொண்டு பிச்சைக்காரர்கள் போலவும், இரவு நேரத்தில் திருடர்களாகவும் அவர்கள் வலம் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.