ஹாலிவுட்டில் நடிக்கும் பிரபல நடிகர்.!! வெளியான தகவல்.!!

Photo of author

By Vijay

ஹாலிவுட்டில் நடிக்கும் பிரபல நடிகர்.!! வெளியான தகவல்.!!

Vijay

தமிழில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ். ‌அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தெலுங்கு சினிமா நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வியுற்றார். மேலும் அங்கு நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த, கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎப்-2, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், தனுஷுடன் மாறன் மற்றும் ஜவஹர் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள நேர்காணலில் ஒன்றில் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ், நெப்போலியன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளனர். இந்த வரிசையில் தற்போது பிரகாஷ்ராஜூம் இணைந்துள்ளார். விரைவில் அவர் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.