சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!!
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு அவர்களை ஜெயிலில் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மனு அளித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இராஜமுந்திரியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திப்பதற்கு ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யான் அவர்கள் சிறைக்கு சென்று சந்தித்தார். பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா அவர்களும் ஜெயிலில் இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்தார். தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்திரபாபு நாயுடு அவர்களை ஜெயிலில் சந்திக்க மனு அளித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பரை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலில் இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திப்பதற்காக சிறைத்துறை அதிகாரிளிடம் மனு அளித்துள்ளார் என்றும் அனுமதி கிடைத்துவிட்டால் நாளை(செப்டம்பர்17) சந்திரபாபு நாயுடு அவர்கள் சிறையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்.டி ராமராவ் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆந்திரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு அவர்கள் தான் காரணம் என்று பேசினார். மேலும் சந்திரபாபு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்திரபாபு நாயுடு அவர்களின் மகன் லோகேஷ் அவர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இந்த செயல்களுக்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் கண்டனம் தெரித்தார். அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்ததையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் அமைச்சர் ரோஜா அவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஜெயிலில் சந்திரபாபு நாயுடு அவர்களை ரஜினிகாந்த் அவர்கள் சந்திக்கும் நிகழ்வு ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலில் இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திக்க அவருடைய மனைவி புவனேஷ்வரி அவர்கள் நேற்று(செப்டம்பர்15) இராஜமுந்திரி சிறைக்கு சென்றிருந்தார். ஆனால் அவருக்கு சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பினர்.
இது குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு அவர்களின் மனைவி புவனேஷ்வரி அவர்கள் “வாரத்தில் மூன்று நாட்கள் ஜெயிலில் இருக்கும் கணவரை மனைவி சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே எனக்கு அனுமதி வழங்காமல் மறுத்து விட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி வழங்குவார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.