நடிகர் ரஜினிகாந்துக்கு வெளியில் பெரிதளவில் யாருடனும் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்றாலும் அவருக்கு பெரும்பாலான பிரச்சனைகள் அவரது குடும்பத்தில் இருந்து தான் வருகின்றன என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது லதா ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதால் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்த பின் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் திரைப்பட சூட்டிங் இருக்கு செல்லும் பொழுது காரை நடுரோட்டில் நிறுத்தி சுவாமி தரிசனம் செய்த வீடியோ மிகவும் வைரலாக பரவப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அவர்கள் பேசியிருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
லதா ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதாவது :-
சமீப காலத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த் அவர்கள் மனதளவில் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்றும் ஹிந்துவாக பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒருவர் வாழும் விதம் உடுத்தும் உடை பேசும் மொழி போன்றவற்றை வைத்து யாரையும் பிரித்து பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பல காலங்களாகவே சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சங்கி என்ற வார்த்தையால் ரசிகர்கள் குறிப்பிட்டு வரக்கூடிய நிலையில் தற்பொழுது லதா ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பது இன்னும் பல சர்ச்சைக்களை உருவாக்குவதாக அமைந்திருக்கிறது.