பிரபல நடிகர்கள், நடிகைகள் உடல்நலக் குறைவு என சமூக வலைதளங்களில் செய்தி பரவுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் பல நடிகர்களின் உடல் நலம் குறித்தும் அவ்வப்போது போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.
நடிகர் செந்தில், கவுண்டமணி, மோகன் சில திரைப்படங்களில் தோன்றினாலும் நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள காரணத்தால் இவர்களது உடல் நலம் குறித்து அவ்வப்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் அதனை இவர்களே மறுப்பதும் சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது.
இந்த வரிசையில் தற்போது நடிகர் ராமராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். சினிமாவில் இருந்து விலகி இருக்கும் ராமராஜன் ஏற்கனவே சிலமுறை சில வதந்திகளில் சிக்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் ராமராஜன் நான் நன்றாக இருக்கிறேன் என்று அவரே பதில் பதிலளித்துள்ளார்.