மீண்டும் கட்சியை விட்டு தாவும் நடிகர் ஆர் கே சுரேஷ்!! இந்த முறை யாரிடம் சென்றார்!!

Photo of author

By Gayathri

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்பது கூறுவது போல ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வுகள் சாதாரணம் ஆகிவிட்டது. அந்த வகையில் அரசியல் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் வரை கட்சியில் தொடர்வார்கள் உரிய மரியாதை மதிப்பு கிடைக்கவில்லையென்றால் உடனே எதிர்கட்சிக்கு சென்றுவிடுவார்கள்.

 

இந்தநிலையில் தமிழகத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி நடிக்கராக இருப்பவர் ஆர்.கே.சுரேஷ் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். நடித்தும் கலக்கியுள்ளார்.

 

இப்படிப்பட்ட நடிகர், கமல்ஹாசன் தொடங்கிய கட்சியில் இணைந்து தனது அரசியலை தொடங்கிய அவர் சில நாட்களில் பாஜகவில் இணைந்து முக்கிய பொறுப்பை பெற்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்தார்.இந்த சூழ்நிலையில் தான் ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பான வழக்கில் சிக்கி பல மாதங்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார்.

 

அதன் பின், போலீசாரின் கைது பயந்து தலைமறைவான ஆர்.கே.சுரேஷ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று சென்னைக்கு திரும்பினார். இதனையடுத்து போலீசாரின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் பாஜகவில் முக்கியத்துவம் அளிக்காமல் இருந்ததால் ஆர்.கே.சுரேஷ் அதிருப்தி அடைந்தார்.

 

இதனையடுத்து பாஜகவிற்கு தற்போது குட்பாய் சொல்லியுள்ளார். தற்போது இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஆர். கே.சுரேஷ்க்கு பொறுப்பு வழங்கி அக்கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 

R.K. சுரேஷ் ஆகிய தாங்கள், கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆணைக்கிணங்கவும் பரிந்துரையின் பேரிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் (National Organizing Secretary) பொறுப்பிற்கு நியமிக்கப்படுகின்றீர்கள். இப்பொறுப்பை ஏற்கும் நீங்கள். நமது அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, நமது கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும்.

 

தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.மேலும், இப்பொறுப்பினை ஏற்கவுள்ள தாங்கள், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, அதிகளவில் உறுப்பினர்களையும் சேர்க்கவேண்டும். குறிப்பாக இதனை அடுத்த வருடத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய பதவி நிரந்தரமாக இருக்கும் என்று மேலும் இந்த பதவி காலமானது மூன்று வருடங்கள் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.