செந்தில்-கவுண்டமணி இருவரும் பேசிக் கொள்வதில்லையா.? செந்தில் மகன் வெளியிட்ட தகவல்.!!

Photo of author

By Vijay

நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பேசிக்கொள்வதில்லை என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.இவர்களுடைய காமெடிக்காகவே நிறைய திரைப்படங்களை ரசிகர்கள் பார்த்தனர்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் தமிழ் ரசிகர்களின் ஆசை இந்நிலையில் கவுண்டமணி செந்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டதாகவும் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

இதுகுறித்து நடிகர் செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனது அப்பா மற்றும் கவுண்டமணி இருவரும் சண்டை போட்டுக் கொண்டதாகவும் பேசிக்கொள்வதில்லை என்றும் தகவல் பரவியது அது உண்மை இல்லை அவர்களின் அண்ணன் தம்பி உறவு இப்போதும் நீடிக்கிறது எல்லோரையும் போலவே நானும் அவர்களது காமெடியை மிஸ் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.