ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? – பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்

நடிகை ஷகீலாவின் திருநங்கை மகள் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியலில் ஆணாக நடித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை ஷகீலா என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கவர்ச்சி தான். திரைத்துறையில் கவர்ச்சியை தனக்கான வழியாய் தேர்வு செய்த ஷகீலா பல விமர்சனங்களை தனது வாழ்வில் எதிர்கொண்டதுண்டு. ஆரம்பக்கட்டத்தில் திரைக்கு வந்த ஷகீலா சில கேரக்டர்களில் நடிக்க 90களில் மெல்ல மெல்ல கவர்ச்சியை கையில் எடுத்தார். காரணம் அவரது குடும்ப சூழல் என்கிறார்கள். உடன்பிறந்தவர்களின் படிப்பிற்காகவும் குடும்பத்திற்காகவும் கவர்ச்சி படங்களில் நடித்ததாக பல பேட்டிகளில் அவரே கூறியதுண்டு.
ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? - பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்

ஷகிலாவின் கவர்ச்சிக்கு மலையாளத்தில் வரவேற்பு இருக்க தொடர்ந்து அதிலேயே பயணித்தார். இறுதியாக 2002ல் தனது கவர்ச்சி படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷகீலா சில குணச்சித்தர வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். தனது திரை வாழ்க்கையில் 3க்கும் மேற்பட்ட காதல் வலையில் விழுந்த ஷகீலாவுக்கு மிஞ்சியது ஏமாற்றமும், வலியும் மட்டுமே. அதனால் தனது வாழ்நாள் முழுவதிலும் திருமணம் செய்ய கூடாது என முடிவெடுத்த ஷகீலா திருநங்கையான ஒருவரை மகளாக தத்தெரித்தார்.

ஷகீலாவின் திருநங்கை மகள் மிளா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். நடிகை, நடிகர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில் விஜய் டிவியின் குக்வித் கோமாளி-2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஷகீலா முதல்முறையாக தனது திருநங்கை மகளான மிளாவை அறிமுகம் செய்தார். அதையடுத்து மிளா குறித்து தகவல்கள் வெளிவரத்தொடங்கின. அதாவது, திருநங்கையாக மாறுவதற்கு முன்பு மிளா நடிகராக இருந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘மருதாணி’ மற்றும் தியாகம் தொடர்களில் மிளா ஆணாக இருந்த போது நடித்துள்ளார்.

ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? - பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்
பின்னர் திருநங்கையாக மாறவே தனது மகளாக அவரை ஷகீலா தத்தெடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் பேசிய ஷகீலா, திரைத்துறையில் தான் செய்த தவறை எந்த பெண்ணும் செய்ய வேண்டாம் என்றதுடன் தனது வாழ்க்கை போராட்டத்தில் தனக்கு துணையாக மகள் மிளாவும், மிளாவுக்கு துணையாக தானும் இருப்பதாக கூறினார்.

Leave a Comment