காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு அதன் கூட்டணிக் கட்சி இடமே உதவி கேட்ட மகா தந்திரசாலி!

0
147

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதோடு அந்த இந்த தொகுதியின் வேட்பாளர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகத்தில் களமிறங்கி இருக்கின்ற வேட்பாளர்கள் பலர் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்திற்காக, பால வினோதமான நூதன முறையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், பலர் வித்தியாசமான முறையில் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகிறார்கள்.

சமீபத்தில்கூட ஒரு வேட்பாளர் வாக்காளரின் வீட்டிற்கே சென்று அவருடைய வீட்டில் இருந்த துணிகளை துவைத்து கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதேபோல பல்வேறு தொகுதிகளில் பல்வேறு இடங்களிலும் பல வேட்பாளர்கள் இப்படி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜகவை சார்ந்த ஹெச் ராஜா போட்டியிடுகிறார். அதுபோல திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாங்குடி என்பவரும் போட்டியிட இருக்கிறார். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்குடி தொகுதியில் பாண்டி என்பவர் போட்டியிடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காரைக்குடி சட்டசபை தொகுதியின் வேட்பாளர் ஆண்டில் ஒரு வித்தியாசமான முறையை கையாண்டு பொது மக்களிடம் வாக்கு கேட்டு இருக்கிறார்.இது எல்லோர் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதாவது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பாண்டி என்பவர் தேர்தல் பிரச்சாரம் செய்த சமயத்தில் திமுகவை சார்ந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது கடந்த 32 வருடங்களாக காங்கிரஸ் மற்றும் அந்தக் கட்சியின் கூட்டணி கட்சிகளுக்கு காரைக்குடி தொகுதியை நீங்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் கடந்த 32 வருட கால வரலாற்றை மாற்றி இந்த தொகுதி திமுக பக்கம் வரவேண்டும் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த தொகுதி உங்கள் வசம் வரும் ஆகவே இந்த தொகுதி உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் எனக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பாண்டி.இது எந்த மாதிரியான பிரச்சாரம் என்று எல்லோரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதோடு திமுகவினர் இது ராஜதந்திரமா அல்லது நரி தந்திரமா என்று தங்களுக்குள் கேள்வி எழுப்பிக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்ட ஒரு கட்சியாகவே தென்படுகிறது. அவ்வாறு இருக்கையில் அந்த கட்சியின் வேட்பாளர் உடைய இந்த வாக்குறுதியை திமுகவினர் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.
ஆனால் பரம விரோதி கட்சியான திமுக இடமே அந்த வேட்பாளர் தனக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று வாக்கு கேட்டது அனைவரையும் மூக்கில் கை வைத்து யோசிக்க வைத்திருக்கிறது.