நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! எஸ்.டி.ஆர்48 படத்தின் கெட்டப் சூப்பர்!!!

0
37
#image_title

நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! எஸ்.டி.ஆர்48 படத்தின் கெட்டப் சூப்பர்!!!

எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் சிலம்பரசன் அவர்கள் நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக அவருடயை 48வது திரைப்படமான எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் தேசிங்பெரியசாமி இயக்கவுள்ளார். எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கவுள்ளார்.

எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகை தீபிகா படுகோன் நடித்தால் இது அவருக்கு இரண்டாவது திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள எஸ்டிஆர்48 திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் சிலம்பரசன் அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் மட்டுமில்லாமல் எக்ஸ், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றது.

இதையடுத்து படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றதாகவும் இந்த டெஸ்ட் ஷூட் படக்குழுவிற்கு திருப்தி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் எஸ்.டி.ஆர்48 திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.