புது கெட்டப்பில் அடுத்த படத்திற்கு தயாராகும் நம்ம வீட்டு பிள்ளை!

0
149

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள டாக்டர் படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்தப் படத்தின் பாடல்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வருகிறது.

டாக்டர் படத்திற்கு அடுத்ததாக நடிக்கப்போகும் படத்திற்கு இப்பவே தன்னை மெருகேற்றி வரும் சிவகார்த்திகேயன், தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவில் சிவகார்த்திகேயன் மீசை தாடி இல்லாமல் கிளீன் சேவ் பண்ணி ரொம்பவே ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

ஏற்கனவே இவருக்கு இளம்பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வருபவர் தனது அடுத்த படத்தின் மூலம் தனது காதல் மன்னனாக மாறும் அளவிற்கு தனது கெட்டப்பை மாற்றி உள்ளார்.

இந்த போட்டோவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கமெண்ட்டுகள் சரமாரியாக கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Previous articleஉள்ளூரிலேயே வேலை வேண்டுமா? தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!
Next articleசெப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !!