செப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !! 

0
58

செப்டம்பர் இறுதிக்குள் இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு !!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ,மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)அறிவித்திருந்தது.

இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த மாணவர்கள் 31 பேர், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போதும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று யுஜிசி கருத்திற்கு இணங்க தீர்ப்பு வழங்கியது.

மேலும் பல்கலைக்கழகத்தின் முழு அதிகாரம் யுஜிசிக்கும் மட்டுமே உள்ளதாக உச்சநீதிமன்றமும் கூறியது. மாணவர்களின் தேர்வு மிக முக்கியம் என்பதால் தேர்ச்சி அடிப்படையிலே பட்டம் வழங்கப்படும் என யுஜிசி தரப்பில் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.