யுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது!

0
214

யுட்யூப் தொகுப்பளரிடம் அவமரியாதை… பிரபல மலையாள நடிகர் கைது!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு இருப்பது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்தபோது, ​​பெண் தொகுப்பாளினியின் கேள்வியால் ஸ்ரீநாத் தனது அமைதியை இழந்துள்ளார்.

அவர் தனது எரிச்சலை வெளிப்படுத்தும் போது தகவாத வார்த்தையை பேசியுள்ளார். கேமராக்கள் அணைக்கப்பட்ட பிறகு அவர் குழு உறுப்பினர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஸ்ரீநாத் மறுத்துள்ளார்.

நேர்காணல் செய்பவர் ஸ்ரீநாத்திடம் ‘அவருடன் நடித்த நடிகர்களை அவர்களின் ‘ரவுடித்தனத்தின்’ அடிப்படையில் தரவரிசைப்படுத்துமாறு கேட்டபோது கோபமாகி வசைபாடியதாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீநாத்தின் சர்ச்சைக்குரிய பேட்டியை வழங்கிய யூடியூப் சேனலில் இருந்து பெற்ற புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீநாத் பாசியை திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். நடிகர் தன்னை விசாரணைக்கு சமர்ப்பிக்க ஒரு நாள் கோரிய நிலையில், பின்னர் அவர் காவல் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு அவரை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நேர்காணலின் வீடியோ மற்றும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Next articleநானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!