நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் ஒன் டூ ஒன்!!! இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல்!!!

0
27
#image_title

நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் ஒன் டூ ஒன்!!! இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல்!!!

நடிகர் சுந்தர் சி அடுத்து நடிக்கும் ஒன் டூ ஒன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

இயக்குநராக முழுநேரமாகவும் நடிகராக பகுதி நேரமாகவும் செயல்பட்டு வரும் சுந்தர் சி அவர்கள் தற்பொழுது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு மத்தியில் இயக்குநர் நடிகர் சுந்தர் சி அவர்கள் ஒன் டூ ஒன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஒன் டூ ஒன் திரைப்படத்தில் ஹீரோ இவர் என்றால் வில்லனாக மற்றொரு இயக்குநர் நடிக்கிறார். ஆம் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்கள் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குநர் அனுராக் கஷ்யப் ஏற்கனவே நடிகர் அதர்வா நடித்த இலைக்கு நொடிகள் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.

மேலும் ஒன் டூ ஒன் திரைப்படத்தில் நீத்து சந்திரா, ராகினி திரிவேதி ஆகியோரும் நடிக்கின்றனர். ஒன் டூ ஒன் திரைப்படத்தை இயக்குநர் கே.திருஞானம் இயக்குகிறார். 24 ஹவர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க சித்தார்த் விபின் அவர்கள் ஒன் டூ ஒன் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்நிலையில் ஒன் டூ ஒன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரயில் உள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இரயில் சம்பந்தப்பட்ட திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.