கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!!

0
19
#image_title

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!!

கூகுள் மேப் பார்த்து இரவில் கார் ஓட்டிய மருத்துவர்களின் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியில் நள்ளிரவு மருத்துவர்கள் இரண்டுபேர் உட்பட ஐந்து பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிக் கொண்டு சென்றனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் கோதுருத் ஆற்றுப் பகுதியின் அருகே செல்லும் பொழுது கூகுள் மேப் காட்டிய வழியில் கார் பயணிக்க கோதுருத் பகுதியில் உள்ள பெரிய ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இளம் மருத்துவர்கள் அத்வைத், அஜ்மல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மூன்று பேரையும் விபத்தில் இறந்த இரண்டு பேரையும் மீட்டனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இறந்த இரண்டு பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கனமழை காரணமாக ஓட்டுநரால் ஆற்றை பார்க்க முடியவில்லை. இதனால் கார் சமநிலை இன்றி ஆற்றினுள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. போலீசார் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.