பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று (ஜூன்-14) திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
வெகு விரைவாக மறைந்து போனது வருத்தமான நிகழ்வு என்று இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். இந்த நடிகருக்கு சினிமாவை தாண்டி இன்னொரு காதல் இருந்துள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கேமிங் கோடிங் என்பதை தனது விருப்பமான செயலாக கொண்டுள்ளார். கணினி கேமிங் மீது அலாதியான காதல் இருந்துள்ளது. ஒரு கைதேர்ந்த பொறியியலாளராக விளையாட்டின் பின்னால் உள்ள குறியீடுகளை கற்பதில் ஆர்வத்துடன் இருந்தார்.
இதன் மூலம் தானே சொந்தமாக ஒரு கேமை உருவாக்க வேண்டும் என்கிற கனவை கொண்டிருந்தார். அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக சுஷாந்த் சிங் ராஜ்புத் இருந்துள்ளார்.
இந்திய அளவில் சினிமாவில் ஜொலித்திருந்தாலும் தனது கனவை நிறைவேற்றும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டார். இதனால் அவரது கனவும் மறைந்து போனது. இவரது இறப்பு குறித்து அவரது தாய்மாமா கூறியபோது, சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்றும் இது கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.