நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

Photo of author

By Sakthi

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

Sakthi

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

கும்பகோணத்தில் இன்று(செப்டம்பர்27) நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அடுத்த வருடம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் “நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் ஈடுபடப் பொது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. என்னுடைய திரைப்படத் துறையில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அதனால் நடிகர். விஜய் அரசியலுக்கு வருவது நான் வரவேற்கின்றேன்.

நாட்டை ஆண்ட பிரதமர்களுள் சிறந்த பிரதமர் விபி சிங் அவர்கள்தான். அவர் வெறும் இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்தார். இருந்தாலும் கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் முழுவதும் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளார்” என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்தார்.

மேலும் தொடர்ந்து பேட்டி அளித்த சீமான் அவர்களிடம் வருப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் இதில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சித் தலைவர். சீமான் “பாஜக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டையும் நான் ஒரே கட்சியாகத் தான் பார்க்கிறேன். அதனால் நான் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போகிறேன்” என்று கூறினார்.