பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். இவர் இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனாவார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலாக ‘வைகாசி பொறந்தாச்சி’ என்ற படத்தன் மூலம் நடிகர் பிரசாந்த் அறிமுகமானார். இதனையடுத்து, திருடா திருடி, பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள், ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

ரசிகர்கள் இவருக்கு பிளாக் பெல்ட் பிரசாந்த், காதல் இளவரசன் என்று பல பட்டங்களை அவருக்கு சூட்டினர். சண்டை, நடனம், நடிப்பு என எல்லாவற்றிலும் அசத்தினார் நடிகர் பிரசாந்த். ஆண் ரசிகர்களை விட பிரசாந்த்திற்கு பெண் ரசிகைகளே அதிகம்.

ஆனால், சரியான கதைகளை தேர்ந்தெடுக்காமல் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். மேலும், சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினையால் பல வருடங்களாக இவரை சினிமாத்துறையில் பார்க்க முடியவில்லை.

தற்போது சமூகவலைத்தளங்களில் பிரசாந்த் படத்தின் வெள்ளிவிழாவில் நடிகர் விஜய் அவமானப்பட்டதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் பிரசாந்த் அறிமுகமான ‘வைகாசி பொறந்தாச்சி’ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த விழா சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு பிரசாந்தை சந்திக்க வேண்டும் என்று விஜய் முயற்சி செய்தாராம். ஆனால் விஜய்யை யாரும் உள்ளே கூட விடவில்லையாம். அந்த ஆதங்கத்தில் ஒரு வெறியோ தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை நச்சரித்து விஜய் நடிகரானார்.

ஆனால், இன்றோ பிரசாந்த் ஆள் அடையாளமே தெரியாமல் மாயமாக, விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.