பாலிவுட்டில் நடிக்கும் நடிகர் விஜய்சேதுபதி!! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
222

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய வெப்சீரியஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்நிலையில் தி ஃபேமிலி மேன் வெப் சீரியஸை இயக்கி பிரபலமடைந்த ராஜ் மற்றும் டீகே அடுத்ததாக இயக்கும் வெப் சீரியஸில் நடிகர்ஸவிஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.இந்த வெப் சீரியஸில் ஷாகித் கபூர், ராஷிகண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வெப்சீரியஸின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது என நடிகை ராஷிகண்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதற்கு முன் விஜய் சேதுபதி ராஷிகண்ணா இருவரும் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/RaashiiKhanna_/status/1421806810718097411?ref_src=

Previous articleபெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம்
Next articleடிப்ளமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!! மாதம் 15,000 சம்பளம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here