சர்தார் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!! அப்போ கார்த்திக்கு இந்த ரோலா!!

Photo of author

By Sakthi

சர்தார் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!! அப்போ கார்த்திக்கு இந்த ரோலா!!

Sakthi

Updated on:

சர்தார் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!! அப்போ கார்த்திக்கு இந்த ரோலா!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார்  படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர கார்த்தி இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி சென்ற வருடம் அதாவது கடந்த 2022ம் வருடம் தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகை ராஷி கண்ணா, நடிகை லைலா, நடிகர் முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்தது.

 

இதையடுத்து சர்தார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததற்கு பிறகு சர்தார் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவுள்ளதாக இயக்குநர் பி.எஸ் மித்ரன் மற்றும் படக்குழு அறிவித்தது. சர்தார் 2 திரைப்படத்திலும் நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார். தற்போது இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.

 

அந்த தகவல் என்ன என்றால் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சர்தார் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதுதான். அதுவும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சர்தார் 2 திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

சர்தார் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களை வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருகக்இன்றது. ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் காஷ்சீட் பிரச்சனை காரணமாக அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.