மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!!

0
31
Apologizing will fix the mistake!! Court ordered in SV Sekhar case!!
Apologizing will fix the mistake!! Court ordered in SV Sekhar case!!

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!!

கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்த விமர்சனம் ஒன்றை நடிகரும் மற்றும் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த சர்ச்சை பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைப்போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த 2020 ஆம் ஆண்டில் இவரைப்பற்றி தவறான தகவல்களை எஸ்.வி.சேகர் பரப்பியதாகவும், மேலும் யூடியூபில் தேசிய கோடியை அவமதிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டதாகவும் இவரின் மீது வழக்கு போடப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.,ஏக்கள் மேல் உள்ள வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பெண் பத்திரிக்கையாளர் குறித்த சர்ச்சை வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி இவரின் மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

மன்னிப்பு கேட்டு விட்டால், இந்த வழக்கில் உள்ள சர்ச்சை பேச்சு குறித்த பாதிப்பை சரி செய்து விடமுடியாது என்றும் கூறி உள்ளார்.மேலும், இந்த வழக்கை விரைவாக ஆறு மாதத்திற்குள் முடிக்குமாறு எம்.பி., எம்.எல்.,ஏக்கள் மேல் உள்ள வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

author avatar
CineDesk