தந்தையுடன் நடிகர் விஜய் பேச்சு வார்த்தை.. இதுதான் அரசியலுக்கான நேரம்.?

0
157

நடிகர் விஜயுடன் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் விஜயின் அரசியல் பிரதேசத்திற்கான பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், உள்ளாட்சித் தேர்தல் மூலம் விஜய் தனது தொண்டர்களுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் அடுத்து வரப்போகும் தேர்தலிலும் பச்சைக் கொடி காட்டினார் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

தம் சிறு பாதை போட்டு கொடுத்ததாகவும், அதை மிகப்பெரிய நெடுஞ்சாலையாக விஜய் மாற்றிக் கொண்டார் என்றும், அவர் பெருமையுடன் கூறியுள்ளார். எதிர்காலத்தில் விஜய் தன்னை விட வேகமாக அரசியல் குறித்து முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் விஜயின் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது திமுக ஆட்சியில் அது போன்ற பிரச்சினைகள் ஏற்படாது என்று நம்புவதாகவும், ஏனென்றால் தற்போதைய ஆட்சி பழிவாங்கும் ஆட்சி இல்லை எனவும் எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட விஜய் தன்னை அழைத்து ஒரு மணி நேரம் பேசினார். அப்போது பொதுவான விஷயங்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்றும் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

Previous articleவெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு!
Next articleடி20 உலகக் கோப்பை..இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.!!