அதிரடியாக கம்-பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நடிகர் விஷால்!!

0
135
#image_title

அதிரடியாக கம்-பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நடிகர் விஷால்!!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் அவர்களுக்கு இறுதியாக லத்தி என்ற படம் வெளியானது. ஆனால் அப்படம் விஷால் அவருக்கு சரியாக போகவில்லை. பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் விஷால் அவர்களுக்கு இன்று மார்க் ஆண்டனி என்ற படம் வெளியாகி உள்ளது. பெரும் வரவேற்பைப் இப்படம் தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூப் சேனலின் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. டிரெய்லர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்தது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் படமும் அமைந்துள்ளதால் மார்க் ஆண்டனி படமும் அமைத்துள்ளது. அவருக்கு மட்டும் இல்லாமல் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இந்த படம் கம்-பேக் படமாக அமைந்துள்ளது ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் உள்ள தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அவர்களை வைத்து “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தை இயக்கினார். அப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து பஹிரா என்ற படத்தையும் இயக்கினார்கள். அப்படம் விமர்சன ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி உள்ள மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleசுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!!
Next articleஎண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!!