குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..?

குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..?

திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை  அஸ்வதி பாபு. இவருடைய வயது 26. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார்.

நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகர் அஸ்வதி பாபு தன்னுடைய காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்ற வாகனங்களின் மீது மோதுவது போல அதி வேகத்துடன் பாய்ந்து சென்றதாக பார்த்த பொதுமக்கள் அனைவரும் கூறினர். மேலும் இதைப்பற்றி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் சிலர் அந்தக் காரை விரட்டினர்.

மேலும் ஒரு வாலிபர் அந்த காரை அவரின் பைக் உதவியோடு ஃபாலோ செய்தார். ஃபாலோ செய்த வாலிபரை கண்ட அவர்கள் காரை வேகமாக இயக்கிய போது டயர் கல்லில் அடிபட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் நிலைகுலைந்த கார் அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.

உள்ளே இருந்த இருவரும் காரை விட்டு இறங்கியவுடன் ஓட்டம் பிடித்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை துரத்திப் பிடித்து கைது செய்தனர். இந்நிலையில்  இருவரும் போதையில்  இருப்பது தெரியவந்தது. எனவே காவல் துறையினர் அவர்களை  கைது செய்து  விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Comment