ஹிட் மேனை முந்திய மார்ட்டின் குப்தில்… டி 20 போட்டிகளில் முக்கிய சாதனை!

0
265

ஹிட் மேனை முந்திய மார்ட்டின் குப்தில்… டி 20 போட்டிகளில் முக்கிய சாதனை!

நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் டி 20 கிரிக்கெட்டின் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே 70 ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் மாறிமாறி இருவரும் இந்த சாதனையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் இருவரையும் முந்தி முதல் இடத்துக்கு வந்துள்ளார். சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். 35 வயதான கப்தில் இதுவரை 116 டி 20 போட்டிகளில் விளையாடி 2 சதம், 20 அரைசதம் உள்பட 3,399 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ரோகித் சர்மா (3,379 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் அதில் ரோஹித் ஷர்மா விளையாட உள்ள நிலையில் கப்திலின் சாதனையை மீண்டும் முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Previous articleகுடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..?
Next articleகோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here