சிம்ரன் இடுப்பை கமெண்ட் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! கவர்ச்சி தப்பில்லை!!

0
125

சிம்ரன் இடுப்பை கமெண்ட் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! கவர்ச்சி தப்பில்லை!!

குணச்சித்திர நடிகையாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆங்கில இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி என்பது தவறு இல்லை என சொல்லி பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

மாநிறமாக இருந்தால் குணச்சித்திர நடிகையாக மட்டுமே நடிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி ஹீரோயின் ஆகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். நடிகர்களுக்கு இணையாக தனி ஹீரோயின் சப்ஜெக்ட் உள்ள படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

1996 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரம்பத்து என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.தொடர்ந்து நீதான அவன்,உயர்திரு 420,அட்டகத்தி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அதன் பிறகு காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பலரின் பாராட்டுகளை பெற்றிருந்த நிலையில் இந்த படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் விக்ரமுடன் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாக உள்ளது.மோகன் தாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சிம்ரன் இடுப்பை பார்த்து ரசித்துள்ளதாகவும், மேலும் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்றும், ஆனால் அது முகம் சுழிக்கும்படியாக இருக்கக் கூடாது ரசிக்கும் படியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!
Next articleஹனிமூன் வந்த இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!! பரபரப்பு தகவல்!!