Amala Paul:காதலில் விழுந்த நடிகை அமலா பால்!! பிறந்தநாளின் பொழுது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!!

0
135
#image_title

Amala Paul: காதலில் விழுந்த நடிகை அமலா பால்!! பிறந்தநாளின் பொழுது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!!

நடிகை அமலா பால் அவர்களின் பிறந்தநாளான இன்று(அக்டோபர்26) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நண்பர் லவ் ப்ரப்போஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

கேரளாமாநிலத்தை சேர்ந்த நடிகை அமலா பால் அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு நடிகர் வீரசமர் நடிப்பில் வெளியான வீரசேகரன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தில் நடிகை அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தார். மைனா திரைப்படம் நடிகை அமலா பால் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

இதையடுத்து  நடிகர் விஜய் நடித்த தலைவா, சியின் விக்ரம் நடித்த தெய்வதிருமகள், ஆரியா நடித்த வேட்டை, ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், நடிகர் சூரியா நடித்த பசங்க 2, நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் ஆகிய திரைப்படங்களிலும் மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தலைவா படத்தின் பொழுது இயக்குநர் எ.எல் விஜய் அவர்களுடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் இயக்குநர் எ.எல் விஜய் அவர்களை நடிகை அமலா பால் அவர்கள் திருமனம் செய்து கொண்டார். இருப்பினும் சில ஆண்டுகளிலேயே இயக்குநர் எ.எல் விஜய அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை அமலா பால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்நிலையில் மீண்டும் நடிகை அமலா பால் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவிய நிலையில் அந்த தகவலை நடிகை அமலா பால் அவர்கள் உறுதி படுத்தவில்லை.

மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் அவர்கள் இன்று(அகடோபர்26) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அதாவது அமலா பால் அவர்களின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் என்பவர் நடனமாடி நடிகை அமலா பால் அவர்களுக்கு லவ் ப்ரபோஸ் செய்யும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. மேலும் ஜகத் தேசாய் அவர்கள் தரையில் முட்டி போட்டு லவ் ப்ரோபோஸ் செய்து அமலா பால் அவர்களின் கைகளில் மோதிரம் மாட்டி விடும் காட்சிகளும் காதலை ஏற்றுக் கொண்ட நடிகை அமலாபால் அவர்கள் ஜகத் தேசாய் அவர்களுக்கு முத்தம் கெடுப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது.

இதை வைத்து பார்க்கும் பொழுது இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்பது தெரிகின்றது. இந்நிலையில் நடிகை அமலா பால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் காதலில் விழுந்ததற்கான வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.