பட்டியலின மக்களை இழிவாக பேசிய நடிகை கைது! தமிழ் சினிமாவில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

பட்டியலின மக்களை இழிவாக பேசிய நடிகை கைது! தமிழ் சினிமாவில்  பரபரப்பு!

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவில் மீரா மிதுன் பட்டியலின சமுதாய மக்களை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.தன்னுடைய புகைப்படங்கள்,வீடியோக்களை சமூக வலைத்தலங்களில் உருமாற்றம் செய்து அசிங்கப்படுத்துவதாகவும் இது போன்ற செயல்களை பட்டியல் சமுதாய மக்கள்தான் செய்வார்கள் என்றும் வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

இதனையடுத்து இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.இதனால் மீரா மிதுன்மீது புகார் கொடுக்கப்பட்டது,இந்த புகாரைத் தொடர்ந்து மீரா மிதுன்மீது ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு போட்டது காவல்துறை.காவல் துறையானது மீரா மிதுனுக்கு சம்மன் ஒன்றையும் அனுப்பியது.

இந்த சம்மனில் மீரா மிதுன் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் மீரா மிதுன் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.மேலும் இன்னொரு வீடியோவில் காவல்துறை தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சவால் விட்டார்.

இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது.இந்நிலையில் காவல்துறை இன்று நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து கைது செய்தது.இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை மீரா மிதுன் தொடக்கம் முதலே தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பார்.

விளையாட்டாக நிறைய செயல்களை செய்தும் வருவார்.ஆனால் இந்த செயல் ஒரு குறிப்பிட்ட பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தி அவர்களை குற்றவாளிகள் என்று காட்ட முயற்சிக்க மீரா மிதுன் போட்ட திட்டமாகவே தெரிகிறது.இவர் சமூகநீதியை அழிக்கும் வகையில் பேசியுள்ளதால் காவல்துறை கைது செய்துள்ளது.