பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

0
97
The woman who had surgery for childbirth! Shame on the corpse!
The woman who had surgery for childbirth! Shame on the corpse!

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஓட மங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 33 வயதான இவருக்கும், 29 வயதான இவரது மனைவி ரம்யாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் தர்மபுரியில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் குழந்தை பாக்கியம் இல்லாததால் ரம்யா ஐந்து வருடமாக திருப்பத்தூர் மாவட்டம் கச்சேரி தெரு பகுதியில் இருந்த அதிமுக மாவட்ட சேர்மன் லீலா சுப்ரமணியனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கான சிகிச்சை தொடர்ந்து பெற்று வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பாக கருவுற்ற ரம்யா தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 ம் தேதி அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக மட்டும் இதுவரை 5 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட தையலை பிரிப்பதற்காக ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்.

தையல் பிரித்த பின்னும் ரம்யாவிற்கு ஏதோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வயிறு வீக்கம் அடைந்ததாகவும், அதன் காரணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரம்யாவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ரம்யாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனையை முழுவதும் முற்றுகையிட்டு போராட்டம் செய்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் போலீசார் உறவினர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இருப்பினும் அவர்கள் சமாதானம் ஆகாத காரணத்தினால், உடலை பிரேத பரிசோதனை செய்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இதை தவறினால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் எனவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த குழந்தையை பெற்றெடுக்க அந்த பெண் எவ்வளவு போராடி இருப்பாள். ஐந்து வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தும் அந்த மருத்துவமனையின் தவறான சிகிச்சையின் காரணமாக தாய் உயிரிழந்த விஷயம் அந்த பகுதியில் உள்ளோரையும், உறவினர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.