நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?

0
50
#image_title

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?

பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பாந்தனா உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு பாஜக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திவ்யா ஸ்பாந்தனா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவர் ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். திவ்யா கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் ஏ. வெங்கடேஷ் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘குத்து’ என்ற படத்தின் மூலம் நடிகர் சிம்பு அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல கன்னடம், தமிழ், தெலுங்குப் படங்களிலும் திவ்யா ஸ்பாந்தனா நடித்துள்ளார்.  சினிமா வாய்ப்பு குறைய தொடங்கிய உடன் நடிகை திவ்யா அவர்கள் 2012ம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்கள் அணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு காங்கிரஸ் கட்சி அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் தந்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை திவ்யா அவர்கள் 2013 மண்டியா இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிறிதளவு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்பும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் தனது முழு நேர பணியை ஆற்றிவந்தார். இதையெடுத்து 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் தற்போது நடிகை திவ்யா அவர்கள் சினிமாவிலும், அரசியலிலும் சற்று ஒதுங்கியுள்ளார். ஆனால் கர்நாடக சினிமாவில் மீண்டும் தயாரிப்பாளராக ரீ-எண்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இடையில் நடிகை திவ்யா அவர்கள் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவின. உடனே தொலைக்காட்சிகளிலும் நடிகை திவ்யா இருந்து விட்டார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை திவ்யா அவர்கள் உணவகம் ஒன்றில் அமர்ந்து உணவருந்துவது போல் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நலமுடன் இருக்கிறேன் எனவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நடிகை திவ்யா ஸ்பந்தனா பதிவிட்டுள்ளார்.

 

நடிகை திவ்ய அவர்கள் மரணமடைந்ததாக வெளியான செய்திக்கும் பாஜக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடிகை திவ்யா அவர்கள் பாஜக கட்சியில் இணைய  உள்ளதாக வதந்திகள் பரப்பின. தற்போது திவ்யா அவர்கள் இறந்து விட்டதாக வெளியான செய்திக்கும் பாஜக கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K