கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்புலிருந்து நடிகை காஜல் அகர்வால் விலகல்.

Photo of author

By Parthipan K

நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பித்தது முதலாகவே மெதுவாகத் தான் நகர்ந்து வந்தது.

இதற்கிடையில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படக்குழுவினருக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்து வருகிறது.

படத்தின் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இந்தியன் 2 பணிகள் முடங்கியதால் ஷங்கர் தெலுங்கு பக்கம் சென்றார்.

தற்போது அவர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். லைகா வழக்கு தொடர்ந்தது முதல் பல சம்பவங்களும் நடந்தது. தற்போது இந்தியன் 2 விவகாரம் சுமுகமாக பேசி முடிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் டிசம்பர் மாதம் முதல் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

தற்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே காஜல் தான் கர்ப்பமாக இருப்பதால் பல படங்களில் இருந்து விலகியுள்ளாராம். தற்போது இந்தியன் 2 படத்தில் இருந்தும் விலகியுள்ளதால் அவருக்குப் பதில் வேறொரு நடிகை படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.