பிரபல நடிகைக்கு கற்பழிப்பு மிரட்டல்! ஆன்லைனில் புகார் கொடுத்த அவல நிலை!

Photo of author

By Parthipan K

தமிழ் திரையுலகில் தனது இளம் வயதில் பிரகாசமாக மின்னிய நடிகை குஷ்பு. இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருந்தது. 

பிரபல நடிகர்களான கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு போன்ற பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அதன்பின் இயக்குனர் சுந்தர்.சி-ஐ  திருமணம் செய்துகொண்டு,  அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இவருக்கு தற்பொழுது சினிமா வாய்ப்புகள் அவ்வளவு இல்லை என்ற போதிலும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கி விட்டார். தொடக்கத்தில் திமுக-வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார்.

அண்மையில் இவர் ஆளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்நிலையில் நான் சமீபத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர்  குஷ்புவுக்கு போன்  செய்து பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ள அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்பின், மர்ம நபரின் போன் நம்பரை குறிப்பிட்டு, அவர் கொல்கத்தாவில்  இருந்துதான் கால் செய்துள்ளார் எனக்கூறி கொல்கத்தா போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவினை கண்ட கொல்கத்தா போலீசார், முழு விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்புமாறு கூறி மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளனர்.