3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா!

Photo of author

By Vinoth

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா!

Vinoth

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரோஜா தற்போது ஆந்திராவில் மந்திரியாக உள்ளார்.

தமிழில் 90 களில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதையடுத்து சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையில் அவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகை ரோஜா தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வமணி-ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும், அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் நடிக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரோஜா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஆந்திராவில் உள்ள போட்டோகிராபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை ஒரே நேரத்தில் 3000 கலைஞர்கள் புகைப்படம் எடுத்தனர். இதன் மூலம் அதிக கேமராக்களால் ஒரே நேரத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையை படைத்த ரோஜா கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் அப்போது புகைப்படக் கலைஞர்களோடு இணைந்து அவர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.