கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!

Photo of author

By Parthipan K

சமீபத்தில் நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி, தேஜா, நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நிக்கி கல்ராணி உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் நவ்னீத் கவுர். 

கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத்தின் மாமனாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடக்கத்தில் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த நவ்னீத் கவுர்,தற்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கோபிசந்தின் ரணம், ஜூனியர் என்.டி.ஆரின் எமதொங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இந்த செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சீக்கிரமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.