சமையலில் கலக்க அன்னபூரணியாக வரும் நடிகை நயன்தாரா! ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!!

Photo of author

By Sakthi

சமையலில் கலக்க அன்னபூரணியாக வரும் நடிகை நயன்தாரா! ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!!

நடிகை நயன்தாரா அடுத்து நடித்துள்ள அன்னபூரணி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கின்றார். மேலும் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்தது மூலமாக ஹிந்தி சினிமாவிலும் அறிமுகம் ஆனார்.

இதையடுத்து நடிகை நயன்தாரா அவர்கள் தற்பொழுது அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அன்னபூரணி திரைப்படத்தை இயக்குநர் நிலேஸ் கிருஷ்ணா அவர்கள் இயக்கியுள்ளார்.

அன்னபூரணி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சச்சு, அச்யுத் குமார், கே.எஸ் ரவிக்குமார், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்னபூரணி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் அனவுன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து அன்னபூரணி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று(அக்டோபர்31) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி அன்னபூரணி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று(அக்டோபர்31) வெளியாகி உள்ளது.

இதையடுத்து நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்கும் 75வது திரைப்படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்று படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது.