வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்
வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இந்திய சினிமாவிலும் மற்றும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்பு உள்ளதால், பெரும்பாலும் தற்போது சினிமா இயக்குனர்கள் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஏற்கனவே கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர்,தோனி மற்றும் நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோரை பற்றிய படங்கள் உருவாகி வெற்றி பெற்றன.மேலும் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வாழ்க்கை வரலாறு படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்பதால் வேலுநாச்சியார் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.கடைசியாக நயன்தாரா நடித்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படமானது எதிர்பார்த்ததை விட அதிக வசூலை பெற்றதால் அடுத்தும் நல்ல கதை அம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்று நயன்தாரா ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இந்த நேரத்தில் பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களை இயக்கிய சுசி கணேசன் அவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியில் ஆட்சி புரிந்த வீரமங்கையான ராணி வேலுநாச்சியார் வரலாறை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் தலைவியும், இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையுமான இவரை பற்றிய இந்த கதையை சொன்னவுடன் உடனடியாக படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா ஒப்புக்கெண்டார் என்று கூறப்படுகிறது.
மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படம் மிகப்பெரிய வசூலை அடையும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.